பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்383


மணல் பள்ளாத்தாக்கில்

சரிந்து சாய்ந்தன!

 

O

 

அண்ணலின்

இரும்பு அங்கி

எதிரியின் வாள் ஒன்றுக்கு

இடம் கொடுத்தது!

 

O

 

இறைவனே!

இனத்தார்

இன்னதென அறிகிலார்

இவர்கள் பிழைபொறும் என்றார்

அண்ணல்.

 

O

 

இறைவனின் தூதரின்

முகத்திலிருந்து

குருதியை வழிக்கிறவர்கள்

குலையாதிருப்பார்களா?

என்றார் அண்ணல்.

 

O

 

இவ்விதம் மொழிவது

தவறு என்று

வானத் தகவல்

வந்து சேர்ந்தது.

 

O

 

அண்ணலை ஒருவன்

நெருங்கினான்