என்ற வதந்திக்கு வாய் முளைத்தது! O பாத்திமா நாயகியும் பலரும் ஓடோடி வந்தார்கள். தங்கள் உயிரின் கரத்தில் வாள் வரலாறு படைப்பதைப் பார்த்தார்கள். மரணம் அவர்களிடத்தில் மறுமுறை வருவதாக வாய்தா வாங்கியது. O அண்ணலின் அன்னப் பறவை ஆயிஷாவும் மற்றப் பெண்களும் முஸ்லிம் வீரர்களின் தாகத்திற்கு தண்ணீர் வார்த்தனர்! O வேறொரு பெண்ணிடம் உம் தந்தை இறந்தார் ; தம்பி இறந்தார் ; என்ற செய்தி இடிகள் இறங்கிக் கொண்டே இருந்தன. அவளோ - அல்லாவிடமிருந்து வந்தோம் ; |