பக்கம் எண் :

398 வலம்புரி ஜான்


உடன்பாட்டை

உடைத்தனர் சூதர்.

 

O

 

வாள் ஒன்று

புறாவின் அலகில்

புதைக்கப்பட்டது !

 

O

 

சூதர் கோட்டையைச்

சூழ்ந்தனர் முஸ்லிம்கள்

பதினைந்து நாளில்

பணிந்தனர் அவர்கள்.

 

O

 

உடன்பாடு என்றார்கள்.

உயிரைப் போக்கிவிட்டால்

உடன்பாட்டிற்கு அவசியமில்லை

என்றார்கள் முஸ்லிம்கள்!

 

O

 

கருணை வள்ளலின்

கண்ணீர்த்துறைமுகத்தில்

கவலைக்கப்பல்கள்

பிழைத்துப் போங்கள் என்றது

பிள்ளைமனம்

எழுநூறு சூதர்

சிரியாவை எட்டினர்