பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்401


திரண்டது

பெரும்படை என்று

திண்தோள் தட்டினான்.

 

O

 

இரண்டாயிரம் பேர்கள்

திரண்டார்கள்.

உணவுப்பொருள் போதவில்லை ;

ஊர்திரும்பினர்...

அபூசுப்யான் ஆட்கள்.

 

O

 

அண்ணலைத்தாக்கிட

ஒரு கூட்டம்

அலைமோதியது.

பொருதுவோம் என்றார்

பொறுமையாய் வாழ்ந்த அண்ணல்!

 

O

 

பேடிகள்

பெண்களைவிட்டு ஓடினர்.

உயிர்களை விட்டுவிட்டும்

உடல்களால் ஓடமுடிந்தது!