பக்கம் எண் :

402 வலம்புரி ஜான்


தோகை ஒன்று தோளில்

தொத்தியது !

 

 

O

 

சிறைப்பொருட்களில்

செஞ்சாந்துச் சிலைகளும்

இருந்தன

அதில் ஒன்று

ஜுவைரியா.

 

O

 

மகளின் கைது

மானத்தின் மறுபரிசீலனை

என்றார் தந்தை

விருப்பம் என்ன

வினாத்தொடுத்தார்

வள்ளல்.

 

O

 

அந்த

பளிங்குமாலை

அண்ணலின் மார்பில்

அடைக்கலம் கேட்டது!

 

O

 

கைதியாய் வந்தவள்

அண்ணலை

நெஞ்சிலே சிறைவைத்தாள்.