பக்கம் எண் :

404 வலம்புரி ஜான்


அவ்வேளை

இயற்கை அழைப்பிற்காய்

ஆயிஷா அகன்றிருந்தார்.

பல்லக்கில் இருக்கிறது

பால் நிலவென்று

ஒட்டகம் ஓட்டி

பாலைவனக்கப்பலால்

மணல் அலைகளைக் கிழித்தான்!

   

O

 

பாலைவெளியில்

பாற்குடம்

தனித்து விடப்பட்டது.

 

O

 

விடிந்தபோது

முஸ்லிம் ஒருவன்

விரைந்து வந்தான்

ஒட்டகத்தோடு.

ஆயிஷா பிராட்டியாரைக்

கண்டான்.

 

O

 

உதடுகள் அவனுக்கு

ஒட்டிக் கொண்டன.

ஒட்டகத்தில் ஏற்றி

ஊர்வந்துசேர்ந்தான்.