பக்கம் எண் :

408 வலம்புரி ஜான்


ஆரம்பமானது அகழ்ப்போர்!

 

 

O

கைபரில் கால்வைத்த

சூதர்கள்

கருவிக்கொண்டே

காலம் கழித்தனர்.

 

O

 

குறைசிகள் மதீனாவைக்

குலைக்க நினைத்தால்

கொடுப்போம் கை என்றனர்.

 

O

 

பெரும்படை திரண்டது.

இஸ்லாத்தை இனி

இல்லாதாக்குவோம் என்றனர்.

 

O

 

கைக்குட்டையை வைத்தா

கைரேகையை அழிப்பது ?

மெழுகுவர்த்தியை ஏற்றியா

கடலைக்கொதிக்க வைப்பது ?

 

O

 

அபூசுப்யான் தலைமையில்

அரேபியாவே அணிவகுத்தது!