பக்கம் எண் :

410 வலம்புரி ஜான்


கடினமான பாறை ஒன்று

கண்ணில் பட்டது

வழிவிட்டு வளைக்கலாமா ?

கேட்டார்கள்.

 

O

 

அண்ணல் ஒப்பவில்லை.

கோடரியால் அவரே

வெட்டினார்.

 

O

 

ஒளிப்பிழம்பொன்று

ஒயிலாய்ச்சிரித்தது.

சிரியாவின் திறவுகோல்

தரப்பட்டது

என்னிடம் என்றார்.

 

O

 

அடுத்து வெட்டினார்.

வெளிச்சக்கதிர் ஒன்று

விளையாட்டுக் காட்டியது!

பாரசீக நாட்டின்

திறவுகோல்

தரப்பட்டது

என்னிடம் என்றார் !