பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்411


அடுத்தும் பிளந்தார்.

நெருப்பு உருண்டை ஒன்று

பாறைக்கு

நேர்வகிடு எடுத்தது.

அப்போது அண்ணல்

எமன் நாட்டின்

திறவுகோல் தரப்பட்டது

என்னிடம் என்றார்!

 

O

 

அல்லாஹுஅக்பர் என்று

அனைவரும் முழங்கினர்.

பளிச்சிட்ட அரண்மனை -

கண்ணில் தெரிந்த

கொலு மண்டபம்

வானவர் வாழ்த்து

வார்த்தையில் வடித்தார்!

முஸ்லிம்களுக்கு...

முறுவலே முகமாயிற்று!

 

O

 

அப்போது

புகை மண்டலத்தைக்

கிழித்துக்கொண்டு

நெருப்பு நாக்குகள்

நிமிர்ந்தன...