பக்கம் எண் :

412 வலம்புரி ஜான்


இன்றோடு இஸ்லாம்

இற்றது என்று

பகைப்படை முழங்கிற்று...

 

O

 

அண்ணலை வெற்றிகொள்ளுவது

பிறகிருக்கட்டும்;

என்னை முதலில்

கடந்துபோ என்றது...

முனையும் முனையும்

முத்தமிட்ட

அவரைக்காய் போன்ற

அகழி!

 

O

 

பகைவர் பதைத்தனர்.

விதவை மேகங்களான

சூதர் சிலரும்

நபிகளை விலகினர் !

 

O

 

பகை ஒருபுறம் -

துரோகம் மறுபுறம்

அண்ணலோ

ஆண்டவனை நம்பி

அசையாது நின்றார்.