பக்கம் எண் :

414 வலம்புரி ஜான்


மதீனாவின் அறுவடையில்

மூன்றில் ஒன்று தருவோம் என்று

உடன்படிக்கை போடலாமா?

எதிரிகளைப்பிரிக்கவே

ஏந்தல் நாயகம்

இதனைக்கேட்டார்!

 

O

 

இறைவன் கருத்தெனில்

இப்போதே ஏற்போம்;

உமது கருத்தெனில்

எம் கருத்தும் உரைப்போம்.

 

O

 

உடன்படோம்;

அறுவடை தருவதற்கல்ல -

செய்வதற்கே

வாட்களை வடித்தோம்.

 

O

 

வல்லமை அவர்களது

வார்த்தைகளில்

வாள்வீச்சு நடத்தியது!

 

O

 

குறைசிகள்

அகழியில் ஆழம்