பக்கம் எண் :

418 வலம்புரி ஜான்


புறாக்களின் கூட்டில் பெண் புலி  

 

O

 

புறாக்களின் கூட்டை

சூதன் ஒருவன்

சுற்றிவந்தான்...

சபிய்யா அம்மையார்

சந்தேகப்பட்டார்.

 

O

 

பெண்களைக் காத்த

பெரும்புலவர் ஒருவரை

அடித்து விரட்டும்

அவனை என்றார்.

 

O

 

அவரோ -

எழுத்தாணி

ஓலையை

உழுவதற்கே...

ஒத்துக்கொள்ளாத

மகா வீரர்!

 

O

 

மான்களின் காவலுக்கு

முயற்குட்டி!