பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்423


கண்கள் இரண்டும்

கிழக்கும் மேற்கும் பார்த்தன.

 

O

 

கனத்துப்போன

பெருமைச் சிறகுகளால்

அந்தக்கிளி

அங்குலம் கூட

அசையமுடியாமல் ஆனாள்.

 

O

 

நாயகம் சொல்லிப்பார்த்தார்.

நடப்பது நடக்கும் தானே!

 

 

O

 

உயிரும், உடலும் பிரிந்தது...

வானை நிலவு மறந்தது...

 

O

 

அடிமைக்கு மனைவியாய்

அமைந்திருந்த ஜைனபை

ஆதரிக்க எவரும் வரவில்லை.

 

O

 

நபிகள் அவளை

நாயகியாக ஏற்றார்கள்.

வளர்த்த கிளிக்கே