பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்427


விக்கல் வந்தால்கூட

விஞ்ஞானப் பொழிவு என்பர்!

 

O

 

ஆனால்...

நாயகம் நல்லார்க்கு வந்தது

வீக்கம் அல்ல; வளர்ச்சி!

மலை ஏறுவது போன்ற

மலர்ச்சி !

 

O

 

நபிகள் இன்று

கொடியானார்; கோட்டையானார்;

குறிக்கோளானார்; குவலயமே

புகழுகின்ற கொள்கை ஆனார்.

 

O

 

மதீனம்

நபிகளை மதித்ததைப்பார்த்து

மக்கா

இடதுபுறமாகத் திரும்பிப்படுத்தது!

 

O

 

அண்ணல்

மக்காவை அகன்று

ஆறுவருடங்கள்

ஆகி இருந்தன.

என்று மீள்வோம்

ஏக்கம் சூழ்ந்தது...