பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்429


ஆண்டவனைத்

தொழுவதற்காக

அண்ணலாரும்

பிறரும் அணிவகுத்தனர்.

 

O

 

குறைசிகள் குழம்பினர்,

புனிதமாதத்தில்

குருதி சிந்த ஒருபோதும்

உடன்படார் உத்தமர்.

இப்படிச்சிலர்.

 

O

 

முகம்மதை

முகமன் கூறி வரவேற்பதா?

இப்படிச்சிலர்.

 

O

 

இறுதியில்

இருநூறு குதிரைவீரர்கள்

கோள்கள் எங்களுக்கு

கோலிக் குண்டுகள் என்றனர்.

 

O

 

வாழ்விக்க வருகிறோம்;

வாளேந்துகிறார்களே

வருந்தினார் அண்ணல்.