பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்431


தாகத்திற்கு நீர் இல்லையே

தடுமாறினார்கள்.

 

O

 

அண்ணல் அம்பொன்றை எடுத்தார்;

எறிந்தார்;

பாழடைந்த ஒரு கிணற்றில்

புத்தூற்றுப் பிறந்தது.

 

O

 

அண்ணலாரிடம்

உரையாடிய

ஊர்த்தலைவர்

குறைசியரை நாடினார்.

 

O

 

செய்தி என்றார்.

அந்த -

நடமாடும் வானொலியின்

காதைத் திருகினர்.

 

O

 

சிலர்

காதுகளைக்

கடன் கொடுத்தனர்!

 

O

 

முகம்மது கோருவது

முறையே என்றார்.