பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்433


குறைசிகள் சிலர்

முஸ்லிம்களைத் தாக்கினர்.

 

O

 

குள்ள மனிதர்கள்

கூண்டில் நின்றனர்...

அண்ணல் அவர்களை

அன்றே விடுவித்தார்!

 

O

 

அண்ணல் உமரைப்

போமென்றார்;

அவரோ-

குறைசியர்

பழிக்குணத்தைப்

பட்டியலிட்டார்.

உதுமான் புறப்பட்டார்.

 

O

 

முறையாக நீர் வரலாம்;

ஆனால் -

முகம்மது ஆகாது என்றனர்.

 

O

 

வழிவிடுங்கள்.

வில்லங்கம் இன்றி

வழிபட்டு விலகுவோம் என்றார்.

சிறைப்பிடித்தனர்.