பக்கம் எண் :

434 வலம்புரி ஜான்


கொன்றனர் உதுமானை

என்ற

களச்செய்தி

வானிலை அறிவிப்பாக

வந்தது.

 

O

 

முஸ்லிம்கள்

முரசம் ஆர்த்தனர்

பதாகைகள் பறந்தன;

பளிச்சிட்டன வாட்கள்!

 

O

 

இப்போது

உதுமான் வந்தார்.

முஸ்லிம்கள்

கண்களைக்கழுவினர்!

 

O

 

குறைசியர் தூதுவர்

குறுகினர்.

உடன்பாடு ஒன்று

உவந்து பிறந்தது.

 

O

 

வள்ளலின் எழுத்தை

வந்தவர் அழித்தார்.

திருத்தூதர் என்பதைக்கூட

திருத்தினார்...