பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்435


அண்ணல் அமைதியாக இருந்தார்.

வயிற்றுக்குள் எட்டி உதைக்கிற

குழந்தையை

கர்ப்பிணி பொறுப்பது போல...

 

O

 

அடுத்த ஆண்டு

மக்காவிற்குள்

வரலாமென்று வரைந்தார்கள்.

 

O

 

உமர்-

உணர்ச்சிப்பிழம்பானார்.

தாழ்வு நமக்கேன்?

அடக்கம் வேண்டும்தான்

அது-

ஆள்போன பிறகன்றோ என்பது

அவரது வாதம்.

 

O

 

இறைவன் நம்மை

ஒரு நாளும்

இழிவுக்குள்ளாக்கமாட்டான்

என்றார் ஏந்தல்.

 

O

 

வாதாடியதற்காக

வாழ்நாள் முழுவதும்