பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்437


உடன்பாட்டின்படி

மதீனம் வந்தவரை

மாநபி

மக்காவிற்கு அனுப்பினார்.

அவர்களோ-

கடற்கரை ஒன்றில்

கொடிபோட்டு உயர்ந்தனர்.

 

O

 

குறைசிகளைக்

குலைத்து மகிழ்ந்தனர்.

 

O

 

குறைசிகள்-

தங்கள்

எச்சில் எழுத்தை

நாவால் நகர்த்தியதற்கு

இதுவே காரணம்.

 

O

 

குறைசிகளின்

கனவுப் பொம்மைகள்

கால்மாறி ஆடின;

காலச்சக்கரம்

சதுரமடித்தது!

 

 

                   *