பக்கம் எண் :

44 வலம்புரி ஜான்


திருமணத் தேதி குறிக்கும்

கடவுள் எழுதிய கடைசிக் கவிதை

கண் விழித்த தொட்டில் !

O

மணல் மகுடத்தை

இரவிலும் கழற்றாத

இந்தச்

சர்வாதிகாரக்காற்று ...

அவரது

பாத வளையங்களுக்குள்ளேதான்

பதுங்கிக்கிடந்தது !

O

எனவேதான் - இந்தப்

பாலைவனத்தை நான்

நேசிக்கிறேன் ! ...

O

மணல்வெளிகள்...

பேரீச்சை மரங்கள் ...

ஒட்டகங்கள் ...

ஒற்றைப்பிறை ...

அம்மா மடியில் - என்

அரசாங்கம்

நடந்த நாள் தொட்டு

கனவுச் சோளிகளாக

இதய நிலத்தில்

இவை-

விழுந்து எழுந்தவை !