பக்கம் எண் :

442 வலம்புரி ஜான்


தொழுக அவனை.

தூய வாழ்க்கை வாழ்க.

உண்மை பேசுக.

உறவாடி வருக.

 

O

 

வேகத்தடைகளே

சாலைகள்...

வியப்புக்குறிகளே

செய்திகள்...

கோடிட்ட இடத்தை

நிரப்புவதே வாழ்க்கை

என்றாகிப்போன

அபூசுப் யானிடமிருந்து

உண்மை வந்ததை

உண்மைக்கே

நம்ப இயலவில்லை.

 

O

 

பதில்களின் தெப்பத்தில்

பாராள்வோன் நீராடினான்.

 

O

 

குளிர் அருவியில்

குளித்த கடல்மீன் ஆனான்.

பாதிரிமார்களோ

பதைத்தனர்.

இஸ்லாத்தின் அவசியத்தை

ஆழப்படுத்தியிருந்த