பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்445


பாரசீகப் பேரரசன்

மகனால்

மயானத்திற்கு

அனுப்பப்பட்டதை

ஆண்டவன் அறிவித்தான்.

 

O

 

அண்ணல் இதனை

அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

 

O

 

செய்தி

கலப்படம் இல்லாத

நிழற்படம் என்றே

அவரும் கண்டனர்.

 

O

 

வியப்பால்

அதிகாரிகள்

கால் பெரு விரல்களில்

ஒரு மணி நேரம்

ஒன்றாய் நின்றார்கள்.

 

O

 

இஸ்லாத்தை ஏற்குமாறு

எகிப்திய அரசர்க்கும்

இரக்கமுள்ள வள்ளல்

எழுதிக்காட்டினார்.