பக்கம் எண் :

448 வலம்புரி ஜான்


அரேபிய மன்னரின் ஆரோகணம் !  

 

O

 

கைபரில்

கூடுகள் கட்டிய சிலந்திகள்

எச்சில் நடனம் ஆடின.

 

O

 

சூதர்களுக்கு

சும்மாயிருப்பதே

சுமையாகிப்போனது !

 

O

 

பழிக்குப்பழிதான்

நரம்புக் கால்வாய்களில்

நர்த்தனம் ஆடியது !

 

O

 

கொம்பேறி மூக்கன்களின்

அகராதியில்

அமைதி -

அடித்தெழுதப்பட்டது !

 

O

 

அவர்தம் தலைவரை

அழைக்க வென்றே

அண்ணலார்

ஆட்களை அனுப்பினார்.