பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்449


அய்யத்திற்கு அவ்வப்போது

உணவாகி விடுகிற சூதர்கள்

வருகிற வழியிலேயே

கலவரத்தில்

கால்வைத்தனர்.

 

O

 

ஒருவனைத்தவிர

சூதர் அனைவரும்

செதுக்கப்பட்டனர்.

 

O

 

இப்னு உபை

இரும ஆரம்பித்தான்.

முகம்மதுவிடம்

படைபலம் இல்லை.

இழுத்துவிடுகிற

மூச்சேபோதும்

இலவம்பஞ்சு.

இளைத்துவிடுவார்

என்றே சொன்னான்.

 

O

 

ஒட்டகங்களை ஓட்டிவந்த

முஸ்லிம் ஒருவனை

சூதர்கள்

முறையின்றிக் கொன்றனர்.