அபூபக்கர், உமர் அனைவரும் கைகளோடு திரும்பினர். O அலீக்கோ கண்நோய் இருந்தும் அண்ணலார் ஆணை ! தொண்ணூற்று மூன்று சூதர்களை - பனங்குலைகளை பாளைஅரிவாள் பதம்பார்ப்பது போல... அலீயின் அமரவாள் அரிந்து அடுக்கியது ! O சபிய்யா என்ற சூதப் பெண்ணோ நரம்புகள் இல்லாத வீணையாய் ஆனாள்... அண்ணல் அவளை ஆதரிக்கவென்று மனைவியாய் ஏற்றார். O சபிய்யாவைத் தாங்கினால் சமாதானம் ஆவர் சூதர் - சாந்தநபி எதிர்பார்த்தார். |