அவர்கள்
அவர்களாகவே இருந்தார்கள் !
O
கைபரில்
கயல்விழி ஒன்று
வள்ளலை, நண்பரை
விருந்துக்கு அழைத்தது.
O
அள்ளி உண்ணுங்கால்
அமுதம் அன்றென
அண்ணல் கண்டார்
நண்பரோ நஞ்சில்
நடுங்கியே செத்தார்.
O
உண்மையினைச்
சொல்லென்றார்-
உயர்ந்த வள்ளல்.
நீங்கள் -
நபியாயிருப்பின்
நெருங்காதன்றோ ?
சூதர் சொன்னது
சூழ்ச்சி என்றறிந்தும்
மன்னிப்பருளினார்
மாநாபிமணிகள்.
* நீலம் - நஞ்சு |