பக்கம் எண் :

458 வலம்புரி ஜான்


ஓயாத இயற்கை

ஒரு நாள்

ஓய்வெடுக்க எண்ணியது.

 

O

 

அன்றுதான்

மதீனாவின்

மணல் அலைகளில்

தங்கமீன்கள்

தாவத் தொடங்கின !

நாயகம் மீண்ட

நன்நாள் இதுவே !

 

O

 

கோடை ஒன்றே

பருவமாகிப்போன

மதீனாவில்

இனி -

வருடம் முழுவதும்

வசந்தம் என்று

இயற்கை -

செய்தி வாசித்தது !

 

O

 

துளிர்களைக்கூட

துண்டித்துப்போட்ட

மரங்கள் எல்லாம்