பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்459


பூவாடைகளால்

தங்களைப்

போர்த்திக்கொண்டன !

 

O

அணில்களெல்லாம்...

கனித்தோட்டங்களைக்

காவல்காத்தன !

 

O

 

வௌவால் கூட்டம்...

நேராய் நின்றது !

 

O

 

நரிகளின் தலைவன்

விஷ்ணுசர்மா...

நாயனம் ஊதினான் !

 

O

 

கொதி மணலின்

உள்ளிருந்து

குளிர் அருவி பொங்கியது !

 

O

 

நாயகம் அன்றுதான்

மதீனாவிற்குள்

நகர்ந்தார்.