இரவு மேடையில் படுதா விழுந்தது ; நட்சத்திரங்களின் நடனமோ... நண்பகலிலும் தொடர்ந்தது ! O காத்திருந்து காத்திருந்தே களைத்துப்போன அரேபியாவின் பார்வைத் துறைமுகங்களில் அன்று கலங்கரை விளக்குகள் கால்மாறி ஆடின ! O மக்கள் மறுபடி மனிதர்கள் ஆயினர் ! O அரேபியப் பெண்கள் நீல நதியில் கூந்தல்களை நீராட்டி தார் பாலைவனத்தில் தணலில் உலர்த்தினர் ! |