தர்ப்பூசணிப்பழங்கள் வாய்திறக்காமலே தாம்பூலம் தரித்தன ! O ஆம் ; அன்றுதான் சதை நகத்தோடு சேர்ந்தது. நாயகம் மதீனா திரும்பினார். O உரிந்த சட்டைகள் ஒன்றுவதற்காகப் பாம்புகளைத் தேடின ! O ஆடினர் பாடினர் அக்களிப் பாகினர் ! ஆனந்தக் கும்மியில் வானவர் ஆகினர் ! அல்லிகள் அன்றைக்கு காலை மலர்ந்தன ! ஆதவன் மாதவம் அள்ளி மகிழ்ந்தன. O நிறைமாதம் ஆகாத முத்துக்கள் ஆயிரம் சிறைச்சிப்பி திறந்தன ; சிந்தை குளிர்ந்தன ! விசிறிடும் சிட்டுக்கள் வியர்வையில் ஆடின ! விழிக்குள் முகம்மதை படமெடுத்துப் பார்த்தன ! |