பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்47


அன்றைய அரேபியா -

O

அன்றைய அரேபியா -

ஊமைப்படம்

ஊர்ந்துவரும் ...

ஓலைக் கொட்டகைக்குள்

இடைவேளை போல இருந்தது !

O

கல்யாணத் தரகர்களையே

கணவர்களாகக்

கனவு காணும்

முதிர்கன்னிகளைப்போல -

தபால்காரர்களையே

தந்தைகளாகப் பாவிக்கிற

பார்வையற்றோர் விடுதியின்

தள்ளாடும் தளிர்களைப் போல

அன்றைய அரேபியர்கள்

அசலை அப்புறப்படுத்திவிட்டு

நகல்களுக்கு

நாட்டாமை தந்தனர் !

O

கவிஞனைத்

தெருமுனையில்

தேய விட்டு விட்டு

அவன் கவிதைக்கு