பக்கம் எண் :

48 வலம்புரி ஜான்


இல்லாத அர்த்தங்களை

இழுத்து வருகிற

இலக்கணப்போலிகள்

எப்போதும் இருந்திருக்கிறார்கள் !

O

அன்றைய அரேபியர்கள்

கலசங்களே

கோபுரத்தைத் தாங்குகின்றன

என்று

கச்சிதமாகச் சொன்னார்கள் !

O

ஆண்டவன் என்கிற

அஸ்திவாரமோ ...

புரண்டு படுக்காமல்

அவர்கள் சொன்னதற்கு

அடிக்கோடு போட்டுக்கொண்டது !

பூக்களின் புலம்பல் !

O

அன்றைய அரேபியாவில்

நகச்சாயத்திற்குத் தருகிற

மரியாதையைக் கூட

நங்கைக்குத் தர மறுத்தவர்கள் ...

மக்கள் தொகையை விட

மலிவாக இருந்தார்கள் !