பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்51


நிலைக்கு ஒரு பிரிவாய்

சிதைந்தனர் மக்கள் !

O

விறைத்து நின்ற

விலா எலும்புகள் ...

முதுகுத் தண்டையே

முட்டித் தள்ளின !

O

அரிந்தது போக

அகப்பட்ட சதையோடு

ஒட்டகங்கள் ...

அலைவதுண்டு ...

O

அவைகளைப்

பார்க்க வைத்துக்கொண்டே

தங்கள் -

பற்களின் இடுக்கில்

அவற்றின்

சதைச் சுவர்களுக்கு

சமாதிகட்டுவார்கள் !

வாடகை மனிதர்கள் !

O

அங்கே -

ஈச்சமரங்களோடு

மல்யுத்தம் நடத்துவதற்கு