பக்கம் எண் :

52 வலம்புரி ஜான்


மணற்புயல் எப்போதோ

வருவதுண்டு ...

ஆனால் -

O

தள்ளாடும் கலசங்களைத்

தாங்களே உடைக்க இயலாமல்

காற்றின் உதவிக்குக்

கடுதாசி போடுகிற

ஈச்சமரங்கள்

எப்போதும் ஆடுவதுண்டு !

O

தலைகீழாகப் பிறந்து

தலைகீழாகவே தொங்கும்

வௌவால்களைப் போல

ஈச்சமரங்கள் ஈன்ற

மதுவின் மைந்தர்கள்

சிரசாசனம் செய்தார்கள் !

O

அரேபியர்களின்

உறைகளுக்குள் வாட்கள்

ஒரு நாளும்

உறங்கியதே இல்லை ...

அவர்கள் அகராதியில்

இரண்டு கலகங்களுக்கான

இடைவேளைதான்

சமாதானம் !