பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்53


கடவுள் எழுதிய கடிதம் !

O

விடிய மறுத்த

இரவுப் பொறியில் ...

அரேபியா இறுகிக்கிடந்தது !

O

கடலே

வற்றிப்போகிற போதும் ...

கண்ணீரிலிருந்து

உப்பு வண்டிகளை

ஊர்வலம் விடுகிற

இறைவன் பார்த்தான் !

O

பருவே முகமாகிப்போன ...

சிறைச்சாலையே

தேசமாகிப்போன ...

தொழுநோயே

தேகமாகிப்போன -

அரேபியாவிற்குள் - தன்

உயிர்த்தென்றலை

உலவ விட்டான் !

O

வெளிச்சத்திற்கு

விலாசம் கிடைத்தது ...

மதங்கள் விழுந்தன !

மார்க்கம் எழுந்தது !