பக்கம் எண் :

56 வலம்புரி ஜான்


பெருமான் பிறந்த இடம் !

O

அன்றாடம்

வெளிநடப்பு செய்கிற

அரேபிய வயிறுகளுக்கு மத்தியில்

தொப்புள் குழியாக

உள்வாங்கிக் கிடந்தது

அவரது குடும்பம் !

O

குளிரைக் கொள்முதல்செய்து

குவித்துவைத்திருக்கிற

வெள்ளரித்தோட்டத்தில்

வெளியில் வராமல் வெயில் காய்கிற

நத்தைக் கூடாக

நகர்ந்தது அவரது

வாழ்க்கை !

O

முகம்மது

முகிழ்த்த இடம்

வறுமை வாய்ப்பட்டது ...

ஆனால் -

வாழ்த்திற்கு உரியது !