பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்57


O

அந்தநாள்

அரேபிய வழக்கப்படி

அவர் -

பால்குடிக்க விடப்பட்டார் !

O

அவர்

பால்குடிக்க விடப்பட்டபோதே

அரேபிய வரலாறு-தனது

வாயிலை

அகலத்திறந்தது !

O

பக்கத்து ஊர்ப்பெண்கள்

மக்காவிற்குள்

வருவார்கள்.

அது ...

O

இரும்புச் சத்தின்றி

இளைத்த குழந்தைகளைத்தேடி

பேரீச்சை மரங்கள்

பெயர்ந்து வருவதுபோல் இருக்கும் !

O

முகம்மது என்னும்

மூங்கில் பூவிற்குப்

பால்தரவேண்டும்

என்பதற்காகவே ...