பக்கம் எண் :

58 வலம்புரி ஜான்


சப்பாத்திக்கள்ளிகள்

சமைந்து கிடந்தன !

O

தாங்கள் மண்டிக்கிடந்த

காட்டைத்தாண்டி ...

முகம்மது என்கிற

புல்லாங்குழலின்

ஏழாவது துவாரத்தை-

எங்கே புதைத்தார்கள்

என்றே தேடின !

பால் தந்த பாவை !

O

நபிகளுக்குப் பால் தந்த

நாயகியே முதல்தாய் !

O

தாய்வேறு; அம்மாவேறு.

வாடகைத்தாய்

வந்துவிட்டாள்.

வலி இன்றி

விளக்குகின்றேன்.

O

பெற்றவள் மார்புகள்

வற்றிவிட்டால்

செவிலித்தாய் வருகின்றாள்.

எவள் வேண்டுமானாலும்