பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்59


தாயாக இருக்கலாம் ...

பெற்றவள் ஒருத்திதான்

அம்மா !

O

அம்மா என்ற விருட்சத்தின்

விதையினை நாம்

அறிவோமா?

O

அம்ம

அம்ம என்றால்

அர்த்தம் என்ன?

கேட்பாயாக.

O

நமக்காக

அப்பாவிடம் கேட்கிறவள் ...

நமக்காக

ஆசிரியனிடம் கேட்கிறவள்...

O

தத்துப்பித்தென்று

நாம் மொழிந்து நின்றாலும்

தத்துவம் என்றதனை

நெஞ்சோடு அணைப்பவள் ...

அவள் தான் அம்மா !