பக்கம் எண் :

60 வலம்புரி ஜான்


O

பெறுகிறவள் அம்மா ...

பேணுகிறவள் தாய்

பெரும்பாலும்

பெறுகிறவளே எங்கும்

பேணுகிறவள் ஆவாள்.

O

அப்பா ...

வாழமாட்டான்.

அம்மா ...

சாகமாட்டாள் !

O

அற்றை நாள்

அரபு வழக்கப்படி

முகம்மது என்னும்

வான் மழைக்கும்

பால் கொடுத்தாள்

அரபுத்தாய் ஒருத்தி !

O

எங்கள் தாயே !

ஜீவ நதிகளின்

மேகத் தொட்டில்களான

மலை உச்சிகள் எல்லாவற்றிலும்

மதர்த்த உன் மார்புகளே

மகத்தானவை !

மாண்புமிக்கவை.