O முற்றத்தில் மேகம் குடத்தோடு முற்றுகை இட்டது போல ‘ஹலீமா’ குழந்தைக்காக வீட்டுக்கு வீடு வந்தாள் ! ஆனால் ... பனீச அத் வம்சத்துப் பெண்கள் ஆளுக்கொன்றாய் குழந்தைப் பூக்களைக் கொய்து விட்டனர் ! O ஹலீமா வந்தபோது மக்கா நகரத்திற்குள் ஏறத்தாழ விரல்கள் இருந்தன ; வீணைகள் இல்லை ! O விரல்களை விரித்தால் ... காற்றுக்கு வலிக்கும் என்று மூடிக்கொண்டே பிறந்த முகம்மது மாத்திரம் இருந்தார் ! O பாட்டனார் முத்தலீஃப் ஹலீமாவைச் சந்தித்தார் ... |