பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்63


நனைக்கிற முயற்சியை

நாளும்விடாத

கடல் அலை போன்றவள்

ஹலீமா !

O

அவளது

சகோதரி மகன் ஒருவன்

இரும்புப் பட்டறையில்

இடம் பிடித்து விட்ட

துரு இவன் !

O

செல்வந்தர் இல்லத்து

அமுல் பேபிகளை வளர்த்தால்

காலி டப்பாக்களால்

கட்டலாம் மாளிகை !

இது ...

அநாதைக் குழந்தை !

O

நுரையீரலில் குடி இருந்ததற்காக

காற்றே வாடகை கேட்கும்

வறுமையில் நாம்

வாழ்கிறோம் ...

அநாதையை வளர்ப்பதால்

ஆவது என்ன ?

வினாக்குறி வெடித்தது !