ஹலீமாவின் கனவு ! O அவளோ ... வருகிற வழியில் கண்ட கனவில் கரைந்தாள் ! வம்சத்துப் பெண்கள் வட்ட மடித்தார்கள் ... புள்ளியாய் ஒடுங்கினாள் ஹலீமா ! O சோலை நிழலில் வெளிச்சப் புள்ளிகள் விழுந்து குதித்தன ... O ஏறிவந்த கோவேறு கழுதை பொய்க்கால் குதிரையாய் பொலிந்து நின்றது ! O பேரீச்சம் பழம் ஒன்று முன் அறிவிப்பு ஒன்றும் இன்றி ... ஹலீமாவின் வாயில் விழுந்தது ... O தீஞ்சுவைத்தேனும் கெட்டது ; தினைமாவின் நினைவும் விட்டது |