அப்படி ஓர் சுவை அதிலே இருந்தது ! O வாயில் விழுந்த வண்ணக்கனி இதோ வாவென்றே அழைக்கிறது ! O மயில்குஞ்சு ஒன்று எங்கிருந்தோ ... மேகத்திற்குப் புதுக்கவிதை எழுதுகிறது ! O ஹலீமா புறப்பட்டாள் - அசைக்கப்பட்ட பந்தல்கால் ... ஆழமாக இறங்குவது போல் உறுதியாகிவிட்டாள் ! O இதுவே என் குழந்தை இப்போதே வேண்டும் என்றாள் முத்தலீஃப் முகம் அந்தி வானத்தை விட அழகாய் மலர்ந்தது ! |