பக்கம் எண் :

66 வலம்புரி ஜான்


காலக் குரல் !

O

வேரும் விழுதும்

கைகுலுக்கிக் கொண்டன !

O

நகக்கண்களுக்குள்

நயாகராவை இழுத்துக் கொண்ட

ஆதாமின் குமாரனைத்தான்

அணைத்துக் கொண்டு போகிறோம்

என்று - அப்போது

ஹலீமா

அறியமாட்டாள் !

O

சிப்பிக்குள்ளே தான்

முகம் பார்த்துக் கொள்ளுகிற

முத்து ஒன்று

யோக நித்திரையில் இப்போது

இருக்கிறது என்பதை - அந்த

பணிப்பெண்கள்

அறிய மாட்டார்கள் !

O

மழைக்கு முன் வருகிற

மண்வாசனை

மழை முடிந்தால் ...

நாசித் துவாரங்களிலிருந்து