பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்67


நகர்ந்து விடுகிறது !

ஆனால் தாயே ! ...

நீ

முகம்மது என்னும் எங்கள்

மூலவனுக்குத் தந்த பால்

இன்னமும் ...

மணம் மாறாமலே

காற்றில்

கவிதை எழுதிக் கொண்டிருக்கிறது !

O

ஒரு

சாகாத சரித்திரம்

உன் -

மார்பு மைதானத்தின் மத்தியில்

மூச்சுப் பயிற்சி நடத்தியதை

அன்று நீ அறிந்திருந்தால் ...

O

ஹலீமாவின் தரிசு நிலத்தில் ...

தேக்குச் செடி ஒன்று

தேடி இடம் பிடித்தது !

O

அன்றுமுதல்

அவள் இல்லத்தில் ...

பசுக்களின் காம்புகளில்

நெய் இலைபோட்டு

நிமிர்ந்தது !