அத்திமரம் ... அலுமினிய ஆப்பிள்கள் ... பீங்கான் நாற்காலிகள் ... ஹெல்மெட்டோடு தூங்குகின்ற மனிதர்கள் கொடிகளை அறுத்துக் கொண்டே குதிக்கிற குழந்தைகள் ... அம்மாக்களைத் தூங்கவைக்கும் தொட்டில்கள் ... எல்லாமே அற்புதம் தான் ! O சாவின் தள்ளுபடி வாழ்வாகிப்போனது ... வாழ்வோ மலிவு விலைச் சாவாகிப் போனது ... எல்லாமே அற்புதம் தான் ! O சங்கு சக்கரங்களுக்குள்ளே பறிக்கப்பட்ட ... சிவகாசிக் குழந்தைகளின் சிரிப்பு ... மத்தாப்பு மைதானங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறது ! O பண்டிகை தோறும் கைதான சிரிப்பிற்கு விடுதலை கிடைக்கும். |