அப்போதும் களவாடப்பட்ட சிரிப்பு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை ! O இந்த உலகம் அற்புதத்தில் அவதரித்து அநியாயத்தில் நடக்கிறது ! O ஆறுமாதத்திற்கு ஒரு தடவை ‘ஹலீமா’ முகம்மது என்கிற வெளிச்சத்தை ஆமினாவின் கண்களில் விதைத்துவிட்டுப் போவாள் ! O இதயம் நிறைந்த தனது இசைப்பாடல் ... பல்லவியைத்தாண்டி அனுபல்லவிக்குள் அடியெடுத்து வைப்பதைப் பார்த்துப் பார்த்து ஆமீனா பூரித்துப் போனாள் ! O வானம் தனது எல்லைகளை அகலமாக்கிக் கொண்டால் ... பறந்து பார்க்க வேண்டும் என்று பட்டது அவளுக்கு ! |