பக்கம் எண் :

72 வலம்புரி ஜான்


O

இரண்டு வருடம்

இனிதே நிறைந்தது ...

முகம்மது

பால் குடிப்பதை நிறுத்தினார் ...

O

இயற்கைக்குப் பருவங்கள்

இறக்கைக் கட்டித் திரும்புகின்றன.

வருடம் வந்தால் வசந்தம் வரும்.

மனிதனுக்குத்தான்

கடந்துபோன பருவங்கள்

நடந்துகூட வருவதில்லை !

பால் குடி மறந்த பாலகன் !

O

பால்குடி மறந்த முகம்மதுவை

‘ஹலீமா’

அம்மா ஆமீனாவிடம்

ஒப்படைத்தாள்.

கட்டி முடிக்கப்பட்ட அணைக்கட்டு

திறக்கப்படுகிற அன்றைக்கு

ஊரே மகிழும் !

ஆனால் ...

O

அடுத்த வேலைக்காகக்

காத்திருக்கத் தொடங்குகிற